Job Fair: நாளை புதுவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தமிழகம் மற்றும் புதுவையில் வேலை நாடும் இளைஞர்களுக்கு வாய்ப்பை அளிக்கும் வகையில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன் வாயிலாக பலரும் வேலை வாய்ப்பை பெற்று தற்போது முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கடந்த வருடம் தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியிலும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை சார்பில் ஜனவரி 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது வீமகவுண்டம்பாளையத்தில் உள்ள சுப்பையா திருமண மண்டபத்தில் நடைபெறும் எனவும் இதில் 10,வகுப்பு 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் மற்றும் கலை அறிவியல் பட்டம் பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.