Sat. Jul 26th, 2025

11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு ரிசல்ட் இன்று வெளியாகிறது: எப்படி பார்ப்பது?

11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் இன்று வெளியாகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. 2022-23 ம் கல்வியாண்டிற்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கியது. 3 வாரம் நடைபெற்ற இந்த தேர்வுகள் ஏப்ரல் 5ம் தேதி முடிவு பெற்றது. 7,73,688 பேர் 11ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 3,60, 908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் அடக்கம்.

இதையடுத்து 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியானன. +1 பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.37% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

+1ம் வகுப்பு பொது தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86% அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல் கடந்த மே மாதம் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது. அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதையடுத்து இந்த தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்காக 11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு நடத்தப்பட்டது. ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை துணை தேர்வு இவர்களுக்கு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் இந்த துணை தேர்வுகளை எழுதினர். இந்த நிலையில்தான் 11, 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் இன்று வெளியாகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.

https://tnresults.nic.in, https://dge.tn.nic.in ஆகிய இணையதளத்தில் மதிப்பெண் விபரங்களை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் மாணவர்கள் பதிவு செய்துள்ள அவர்களின் பெற்றோர்களின் போன் எண்ணுக்கும் ரிசல்ட் எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் ரிசல்ட்டை தெரிந்து கொள்ள முடியும். அவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை கொடுத்து, தேர்வு முடிவை தெரிந்து கொள்ள வேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *