தொழில்நுட்பம் அல்லாத ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2023-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.
தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 2,10,163 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 19 மையங்கள் மற்றும் நகரங்களில் 29 இடங்களில் நடைபெற உள்ளது.
தென்மண்டலத்தில் செப்டம்பர் மாதம் 4,6,8,11,14, என 3 ஷிப்டுகளில் இந்த தேர்வு நடத்தப்படும். முதல் ஷிப்டு நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, இரண்டாவது ஷிப்டு நேரம் நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, மூன்றாவது ஷிப்டு நேரம் மாலை 04.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை நடைபெறும்.
மின்னணு முறையிலான அனுமதி சான்றிதழ்களை தேர்வர்கள் அவர்களுக்குரிய தேர்வு தேதியில் இருந்து 4 நாட்களுக்கு முன் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வுக் கூடங்களில் கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பருவ இதழ்கள், செல்பேசி, ப்ளூடூத் போன்ற மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்வின் போது இத்தகைய பொருட்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப் பட்டவருக்கு 3 முதல் 7 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்.