கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 16 posts
கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer, Lab Technician, Security Guard மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer, Lab Technician, Security Guard மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 16 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு /12ம் வகுப்பு / B.Sc / Diploma / DMLT / ITI / M.Sc / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 59 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முடித்தல் ரூ.60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.