You are currently viewing வடசென்னையில் September 1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

வடசென்னையில் September 1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

வடசென்னையில் September 1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

பிராட்வே, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வடசென்னையில் வசிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி முகாம், வரும் செப்., 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.பிராட்வே, பிரகாசம் சாலையில் உள்ள, பாரதி பெண்கள் கல்லுாரியில், காலை 10:00 மணி முதல் முகாம் நடக்கிறது.

இந்த திறன் பயிற்சி முகாமில், எம்.ஆர்.எப்., – டி.வி.எஸ்., லுாக்காஸ் – முருகப்பா, டெக் மகேந்திரா, அசோக் லேலாண்ட், சதர்லேண்ட் குளோபல் சர்வீஸ், எல்.ஜி., – பூர்வீகா மொபைல்ஸ் உள்ளிட்ட 23 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இதில் எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், ஐ.டி.ஐ., – பட்டதாரிகள் உள்ளிட்ட, 18 வயது முதல் 35 வயதுடைய இளைஞர்கள் பங்கேற்கலாம்.தேர்ந்தெடுப்போருக்கு 15,000 ரூபாய் முதல் 22,000 ரூபாய் வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ், நாள் ஒன்றுக்கு 375 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பும் வழங்கப்படும்.சிறப்புமிக்க இந்த வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி முகாமை, வடசென்னையில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply