முக்கிய செய்திகள் (Headline News)

முக்கிய செய்திகள் – Headline News (Updated on 18.10.2023)

லியோ திரைப்படம் அதிகாலை காட்சி: நீதிமன்றம் அனுமதி மறுப்பு
சிவகாசி அருகே அடுத்தடுத்து பட்டாசு ஆலை வெடித்து விபத்து: 12 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
போக்குவரத்து நெரிசலால் திணறும் சென்னை; 10 புதிய மேம்பாலங்கள் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணியை வேகப்படுத்திய சிறப்பு அதிகாரிகள்
அதிமுக ஆட்சியின்போது ஆவினில் முறைகேடாக செய்த நியமனங்கள் அத்தனையும் ரத்து – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் ஜனவரி மாதம் பிரமாண்டமாக மினி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என அதன் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
காலை 7.30 மணி அளவில் திருக்கச்சூர் நடுநிலைப் பள்ளியில் அரசு தலைமைச் செயலாளர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான ஆய்வினை மேற்கொள்கிறார்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்பாளராக சு.திருநாவுக்கரசர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என விஞ்ஞானிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்; ஆட்களை மீட்கும் சோதனை வரும் 21ம் தேதி நடத்தப்படும் – இஸ்ரோ தகவல்
கடல்சார் பொருளாதாரத்துக்கு ரூ.22,000 கோடியில் திட்டம் – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது என நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் 5வது விமானம் டெல்லி வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஸாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் சீனா சென்றுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார்.
13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் 11 பாலஸ்தீன பத்திரிக்கையாளர் உயிரிழப்பு.

உலகக் கோப்பை 2023: நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் இன்று சென்னையில் மோதல்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
அகமதாபாத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட சம்பவம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பை 2023ல் நெதர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.