CSIR ஆணையத்தில் ரூ.38,483/- ஊதியத்தில் வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
CSIR-Central Leather Research Institute ஆனது Junior Secretariat Assistant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.38,483/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
CSIR-CLRI காலிப்பணியிடங்கள்:
Junior Secretariat Assistant பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Secretariat Assistant கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CSIR-CLRI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Junior Secretariat Assistant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.38,483/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR-CLRI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination மற்றும் Proficiency Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.