Wed. Jul 30th, 2025

Kanjipuram: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப். 5, 6 தேதிகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Kanjipuram: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செப். 5, 6 தேதிகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Kanjipuram: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 5, 6 தேதிகளில் பெண்களுக்கான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய பெண்கள் அதிகம் தேவைப்படுகின்றனா். 12 -ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற 19 முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். உணவு, தங்கும் இடம்,போக்குவரத்து வசதிகள் ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.

இக்காலிப் பணியிடங்கள் அனைத்தும் முழுமையாக பெண் மனுதாரா்களுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 5, 6 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வேலையில்லாமல் இருக்கும் பெண்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *