Tue. Jul 8th, 2025

Nagai:நாகை மாவட்டத்தில் செப்.6-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Nagai: நாகை மாவட்டத்தில் செப்.6-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

Nagai: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், பிரத்யேகமாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் செப்டம்பா் 6 ஆம் தேதி திருச்சி (மத்திய பேருந்து நிலையம்) கண்டோன்மென்ட் எண்.15, மெக்டொனால்டு ரோடு என்ற முகவரியிலுள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள், அறை எண் 14, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மின்னஞ்சல்மூலமாகவோ, தங்களது சுய விவரம் மற்றும் கல்வித் தகுதி குறித்த விவரங்களை செப்.4 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *