Abroad: வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்

Abroad: வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்

உலக அளவில் அதிகமான மக்கள் கல்வி மற்றும் வேலைகளுக்காக வெளிநாடுகளில் செல்கின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்தினரையும் தங்களோடு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்து அரசு விசா எடுப்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் புதிதாக படிக்க வரும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை 2024 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. முதுகலை ஆராய்ச்சி மற்றும் அரசு நிதி உதவி பெறும் மாணவர்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த புதிய அறிவிப்பால் இங்கிலாந்துக்கு வருகை புரியும் நபர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply