தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் Management Trainee காலிப்பணியிடங்கள்
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் Management Trainee காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Management Trainee பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Management Trainee பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelors Degree / CA / MBA/ PGDBM / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி 21.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.