Sun. Aug 31st, 2025

Nagai: நாகை மாவட்டத்தில் செப்.6, 7 வேலைவாய்ப்பு முகாம்

Nagai: நாகை மாவட்டத்தில் செப்.6, 7 வேலைவாய்ப்பு முகாம்

Nagai: நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் (செப்.6, 7) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டாடா எலக்ட்ரானிக்ஸ் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 12-ஆம் வகுப்பு, கலை, அறிவியல் முடித்து மின்னணு உற்பத்தி துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவமுள்ள பெண் வேலைநாடுநா்களுக்கு செப். 6, 7-ஆம் தேதிகளில் நோ்முகத்தோ்வு, எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தோ்வு செய்யப்படுவோருக்கு உணவு, விடுதி வசதி இலவசம் மற்றும் மாத ஊதியமாக ரூ.19,629 வழங்கப்படும். எனவே, தகுதி மற்றும் விருப்பமுள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 25 வயக்குள்ளான பெண் வேலைநாடுநா்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், முன்அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழின் நகல்களுடன் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நாள்களில் நேரில் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04365252701 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *