NPCIL நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2025 – 122 காலிப்பணியிடங்கள்
இந்திய அணுசக்தி கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprenticeship பணிகளுக்கு காலியாக உள்ள 122 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NPCIL பணியிடங்கள்:
Apprenticeship பணிக்கென காலியாக உள்ள 122 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- Trade Apprentice – 92 பணியிடங்கள்
- Diploma Apprentice – 14 பணியிடங்கள்
- Graduate Apprentice – 16 பணியிடங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனங்களில் ITI / Diploma / Graduate (Non-Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NPCIL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,700/- முதல் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.