தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இம்மாதம் காலண்டு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19.09.2023 அன்று தேர்வுகள் தொடங்கி 27.09.2023 அன்று வரை நடைபெற உள்ளது. 11ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 15.09.2023 ம் தேதி தொடங்கும் தேர்வுகள் 27.09.2023 தேதி வரை நடைபெற உள்ளது. காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அனைத்து பள்ளிகளிலும் வினா தாள்களை பள்ளி நிர்வாகம் பதிவிறக்கம் செய்வது மற்றும் தேர்வு நடத்துவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. exam.tnschoolsgov.in என்கிற இணையதளத்தை பயன்படுத்தி வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.