இன்று (04.09.2023) மின்தடை ஏற்படும் இடங்களின் விபரங்கள்
தமிழகம் முழுவதும் துணை மின் நிலையம் மூலம் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க சம கால இடைவெளியில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்தடைக்கு முன்பாக எச்சரிக்கை அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.4) டி.ஐ.சைக்கிள் மற்றும் மேனாம்பேடு, கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.