தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அப்டேட்
தமிழக பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வருகிற செப். 15ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இருந்து வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி அன்றே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்த அப்டேட்
அதில் தமிழகத்தின் மிகப்பெரிய திட்டம் என்றால் அது மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இந்த அத்திட்டம் தொடங்கி ஒரே நேரத்தில் ஒரு கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மேலும் அவர்கள் மாதம் ரூ.1000 ஆண்டுதோறும் வாங்க இருக்கின்றனர். இந்த திட்டம் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும், அதிகமான பயனாளிகள் இருக்கும் திட்டமாக இருக்கிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கும் பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம்.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் இந்த உரிமைத்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு பணம் எடுப்பதில் எந்த சிக்கலும் இருக்க கூடாது. அதே போல வரும் 15 ஆம் தேதி என்னுடைய சார்பில் பணம் அனுப்பப்படும். பணம் எடுக்க எதாவது பிரச்சனை இருந்தால் அது குறித்து இலவச எண் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.