கல்வி விகடன் – TNPSC Group I MOCK TEST 2024
அரசுப்பணி கனவோடு இரவு பகல் பாராமல் படித்துவரும் உங்களுக்கு விகடனின் மனமார்ந்த வாழ்த்துகள். Deputy Collector, Deputy Superintendent of Police உள்ளிட்ட குரூப் 1 பதவிகளுக்கான TNPSC முதல்நிலைத் தேர்வு வரும் ஜூலை 13-ம் தேதி நடக்கவுள்ளது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவுள்ளார்கள். இந்தக் கடும் போட்டிக்கு மத்தியில் நம்பிக்கையோடு உழைத்துவரும் உங்களுக்குக் கைகொடுக்க கைகொடுக்க கல்வி விகடனும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் தென்னிந்தியாவின் பிரபலமான பயிற்சி மையமான KingMakers IAS Academy-யும் இணைந்து எடுத்திருக்கும் முன்முயற்சி இந்த மாதிரித் தேர்வு. ஜூன் 16 அன்று தொடங்கி, ஜூலை 12-ம் தேதி வரை இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். உங்கள் அரசுப்பணி லட்சியத்துக்கு இந்த மாதிரித் தேர்வு நிச்சயம் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம். கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து Register செய்த பின்பு மாதிரி தேர்வை தொடங்குங்கள். நீங்களும் துணை கலெக்டர் மற்றும் டி.எஸ்.பி பதவிகளுக்குத் தேர்வுபெற்று அரசுப்பணியில் அமர விகடன் உங்களை மீண்டும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது!
Register Link: https://special.vikatan.com/tnpsc-group-1-prelims-mock-test/
விதிமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள்:
1. இந்த மாதிரித் தேர்வுக்காக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. மேலே உள்ள படிவத்தில் உங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் கொடுத்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
2. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மூலமாக தினந்தோறும் Login செய்து மாதிரி தேர்வுகளில் பங்கேற்கலாம்.
3. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வினா-விடை தரப்படும்.
4. தினமும் 200 கேள்விகளுக்கு இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். இவற்றிற்கு 180 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும்.
5. தினந்தோறும் காலை 9 மணிக்கு அன்றைய தினத்திற்கான கேள்விகள் வெளியாகும். மொபைல் எண் மூலமாக Login செய்ததும் நேரடியாக கேள்விகளுக்குச் செல்வீர்கள்.
6. மொத்த மதிப்பெண்கள் 300. ஒரு சரியான விடைக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.
7. ஒரு கேள்விக்கு ஒருமுறை மட்டுமே விடையை தேர்வு செய்ய முடியும். விடையைத் தேர்வு செய்து முடித்தபிறகு அடுத்த கேள்வி திரையில் தானாகவே தோன்றும்.
8. இப்படி 200 கேள்விகளுக்கும் விடையைத் தேர்வு செய்த பிறகு, நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண் திரையில் தோன்றும். நீங்கள் சரியாக விடையளித்த கேள்வியின் எண் பச்சை நிறத்திலும் தவறாக விடையளித்த கேள்வியின் எண் சிவப்பு நிறத்திலும் தோன்றும். சிவப்பு நிறத்தில் இருக்கும் எண்ணை க்ளிக் செய்தால், அந்தக் கேள்விக்குச் செல்வீர்கள். அங்கு அதற்கு சரியான விடை பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டப்படும். கூடவே, நீங்கள் எழுதிய வினா விடைத் தாளையும் காணலாம்.
9. ஒருவேளை தவறவிட்ட முந்தைய நாள் தேர்வுகளில் பங்கேற்க வேண்டுமெனில், முதலில் அந்த நாளுக்கான தேர்வை முடிக்கவேண்டும். அதன்பிறகே முந்தைய தேர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, தேர்வின் இறுதியில் மதிப்பெண் பகுதிக்கு கீழே காட்டப்படும்.
10. தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிட்டு தொடர்புகொள்ளுங்கள். விகடனிலிருந்து உங்களை தொடர்புகொள்வார்கள்.