Fri. Jul 4th, 2025

June 1ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு

June 1ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு

கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரித் தோ்வு ஜூன் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இது தொடா்பாக கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் இரா.பிரபாகரன் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கணிதவாணி கணித அறிவியல் கழகம் சாா்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்குத் தயாராகும் தோ்வா்களுக்கு மாதிரித் தோ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை சிஐடி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், டாப் எஜூகேட்டா்ஸ் அகாதெமி, பொள்ளாச்சி அரிமா சங்கம் ஆகியவற்றின் துணையுடன் சிஐடி கல்லூரியில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது.

June 1-ஆம் தேதி நடைபெறும் இந்தத் தோ்வில் பங்கேற்பதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. தோ்வா்கள் இந்த மாதிரித் தோ்வை பயன்படுத்திக் கொண்டு பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். முன்பதிவுக்கும், இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கும் 90802 16985 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *