You are currently viewing Gandhi Jayanti பற்றி சில…

Gandhi Jayanti பற்றி சில…

Gandhi Jayanti பற்றி சில

ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளின் சிறப்புகள் என்ன?

வெள்ளையர்களின் ஆட்சியின் கீழ் அடிமை தேசமாக இருந்த இந்தியா, சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று ஏராளமான தலைவர்கள் போராடினர். அவர்களில் முதன்மையானவர் காந்தி. இந்தியாவின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு சிறப்பு பெற்றவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் அளப்பறிய பங்காற்றியது மட்டுமின்றி அகிம்சை, உண்மை உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளையும் கற்றுத் தந்திருக்கிறார். நடப்பாண்டு அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு. இவரது பிறந்த நாளை காந்தி ஜெயந்தி என்ற பெயரில் நாம் கொண்டாடி வருகிறோம்.

இந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காந்தியை நினைவு கூறும் வகையில் பல்வேறு கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக இளைஞர் அமைப்புகள் கூடி வீதிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு காந்தியின் கொள்கைகளை பரப்புவர்.

அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை நாடகங்களாக நடத்திக் காட்டுவர். ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டங்கள் நடத்துவது சாத்தியமில்லை. எனவே ஆன்லைன் வாயிலாக காந்தி தொடர்பான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். இந்த நன்னாளில் அவரது போராட்டங்கள், வழிகாட்டுதல்கள், படைப்புகள் உள்ளிட்டவை நினைவு கூற வேண்டியது அவசியம். இந்த ஒருநாள் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர் காந்தி.

அக்டோபர் 2, 1869ல் குஜராத் மாநிலம் போர்பந்தரில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார். சிறு வயது முதல் தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். வழக்கறிஞராக வாழ்வை தொடங்கினாலும் தனது கோட்பாடுகளினால் உலக மக்கள் அனைவரையும் ஈர்த்தவர்.

இந்திய சுதந்திரத்திற்காக நாட்டு மக்களை ஒன்றுபடச் செய்தவர். அமைதி, அகிம்சையை பெரிதும் விரும்பினார். பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிராக 1930ல் நடந்த தண்டியாத்திரை மற்றும் 1942ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தி முன்னெடுத்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் ஆகும். சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.

”மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் இன்று (அக்டோபர் 2ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது”

தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, தற்போது குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர்பந்தரில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 154வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், வாழ்க்கைக்கான அவரது தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

டைம் இதழின் மரியாதை

1930 ஆம் ஆண்டில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை மகாத்மா காந்தி பெற்றார். இந்த சிறப்பைப் பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் மகாத்மா காந்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரிஷ் உச்சரிப்பு

காந்தி தனது ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர் ஐரிஷ்காரர் என்பதால் ஐரிஷ் மொழி உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலம் பேசினார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் 

அகிம்சை போராட்டத்தை வலியுறுத்தும் மகாத்மா காந்தி அடிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவருக்கு ஒரு முறை கூட அந்த விருது வழங்கப்படவில்லை.

மகாத்மாபட்டம்

காந்தியடிகளுக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை, வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வழங்கினார்.

2 தலைவர்களின் பிறந்த நாள்

மகாத்மா காந்தி தனது பிறந்த நாளை 1904ஆம் ஆண்டு பிறந்த லால் பகதூர் சாஸ்திரியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இறுதி ஊர்வலம்

மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம் 8 கிலோ மீட்டர்கள் வரை நீண்டது.

காந்தியின் பெயரிடப்பட்ட சாலைகள்

இந்தியாவிற்கு வெளியே 48 சாலைகளுக்கும் நாட்டிற்குள் 53 சாலைகளுக்கும் மகாத்மா காந்தியின் என பெயரிடப்பட்டு உள்ளன.

ஹென்றி ஃபோர்டின் பாராட்டு

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, மகாத்மா காந்தியின் தீவிர அபிமானி  என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அமைதி தினம்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் முதல் அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் வரை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை காந்தியின் கொள்கைகளை மதிக்கும் வகையில் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது.

Why do we celebrate Gandhi Jayanti?

Gandhi Jayanti is celebrated on October 2nd every year to commemorate the birth anniversary of Mahatma Gandhi. Mahatma Gandhi was an Indian lawyer, anti-colonial nationalist, and political ethicist. In India, Mahatma Gandhi’s birthday, 2 October, is a national holiday.

What is Gandhi Jayanti celebrated?

Gandhi Jayanti is celebrated on 2nd October every year to mark the birth anniversary of Mohandas Karamchand Gandhi, who was famously known as Mahatma Gandhi.

What is the full date of Gandhi Jayanti?

Mahatma Gandhi’s birthday (Gandhi Jayanti or Mahatma Gandhi Jayanti) is a gazetted holiday in India on October 2 each year. It marks the anniversary of Mahatma Gandhi’s birth on October 2, 1869. Gandhi is remembered for his contributions towards the Indian freedom struggle.

What happened on October 2 in Indian history?

Every year on the 2nd of October, Gandhi Jayanti is celebrated to commemorate the birth anniversary of Mohandas Karamchand Gandhi. Mahatma Gandhi was born on 2nd October 1869 in Porbandar, Gujarat.

What is the importance of 2nd October?

Gandhi Jayanti is among the national holiday observed in India, celebrated annually on October 2nd to commemorate the birth anniversary of Mahatma Gandhi also called ‘Father Of The Nation’, the iconic leader of the Indian independence movement against British colonial rule.

Who was born on 2 October in India?

The second Prime Minister of India, Lal Bahadur Shastri’s birth anniversary is observed on October 2. Lal Bahadur Shastri shares his birthday with Father of the Nation Mahatma Gandhi. Lal Bahadur Shastri, who played a prominent role during the Indo-Pak war, worked with the Indian government in various capacities.

Is 2nd October compulsory holiday in India?

Yes, Gandhi Jayanti on 2 October is one of the three national holidays of India. On this occassion, government offices, schools, colleges, and many businesses remain closed to mark the birth anniversary of Mahatma Gandhi. The day gives people a chance to unite and celebrate Gandhian philosophy.

Leave a Reply