You are currently viewing மத்திய அரசின் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டம் – 3 ஆண்டுகள் நீட்டிப்பு

மத்திய அரசின் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கும் திட்டம் – 3 ஆண்டுகள் நீட்டிப்பு

இந்தியாவில் மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இன்னும் 3 ஆண்டுகள் வரை நீடிக்கப்படுவதாக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதற்காக சுமார் 75 லட்சம் இணைப்புகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு மற்றும் மானிய பணம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று (செப். 13) ஒப்புதல் வழங்கி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசின் அறிவிப்பின் படி அடுத்த 3 ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படும். அதற்கு சுமார் ரூ.1650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply