You are currently viewing 1,812 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

1,812 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2008 முதல் 2011-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் தரம்உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் 912 ஆசிரியா்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். இதேபோல், 2012-13-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டன.

இவற்றில் தற்காலிமாக 900 முதுநிலை ஆசிரியா்கள் பணிநியமனம் செய்யப்பட்டனா். ஒட்டுமொத்தமாக இந்த 1,812 ஆசிரியா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இந்தப் பணியிடங்களுக்கு 2027 டிசம்பா் 31-ஆம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநா் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதையேற்று தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 1,812தற்காலிக பணியிடங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை தொடா் பணி நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் தாமதமின்றி கிடைக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Reply