You are currently viewing Milad un nabi: மிலாது நபி விடுமுறையில் மாற்றம்

Milad un nabi: மிலாது நபி விடுமுறையில் மாற்றம்

Milad un nabi: தமிழகத்தில் மிலாது நபி வரும் 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுச்சேரியிலும் மிலாது நபி செப்.28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.27-ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Milad un nabi:

நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாடி நபிஇது நபியின் நினைவு தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இது தொடக்க காலத்தில் எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்னர், 11 ஆம் நூற்றாண்டில் பிரபலமானது. அன்றைய காலகட்டங்களில், ஷியா முஸ்லிம்களின் அப்போதைய ஆளும் பழங்குடியினர் மட்டும் தான் இந்த பண்டிகையைக் கொண்டாட முடியும், பொது மக்கள் அல்ல. 12-ம் நூற்றாண்டில் மட்டுமே சிரியா, மொராக்கோ, துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். பின்னர் சில சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர்.

Milad un nabi:

நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாடி நபிஇது நபியின் நினைவு தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இது தொடக்க காலத்தில் எகிப்தில் அதிகாரப்பூர்வ விழாவாகக் கொண்டாடப்பட்டு பின்னர், 11 ஆம் நூற்றாண்டில் பிரபலமானது. அன்றைய காலகட்டங்களில், ஷியா முஸ்லிம்களின் அப்போதைய ஆளும் பழங்குடியினர் மட்டும் தான் இந்த பண்டிகையைக் கொண்டாட முடியும், பொது மக்கள் அல்ல. 12-ம் நூற்றாண்டில் மட்டுமே சிரியா, மொராக்கோ, துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். பின்னர் சில சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர்.

 

அரபு நாட்டில் வாழ்ந்த மக்களின் நிலைமை மோசமாக இருந்த காலகட்டங்களில் அங்கே குடிப்பது, பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவது போன்ற  சமூக விரோத செயல்கள் நடந்தது. இது மாதிரியான பாவகரமான செயல்களில் ஈடுபடும் மக்களை சீர்திருத்த தான் அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமனிதன் தான் நபிகள் நாயகம் என்று கூறப்படுகிறது.

Milad un nabi:

கிபி 570 ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் தேதி மெக்கா நகரில் நாயகம் அவரித்தார். ஹஜ்ரத் அப்துல்லாஹ் மற்றும் ஹஜ்ரத் அமீனா ஆகியோர் தான் இவரின் பெற்றோர். இவரின் முழுப்பெயர் ஹஜ்ரத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸூலே கரீம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் என்பது தான். நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்பாகவே அவரின் தந்தை இயற்கை எய்தினார். பின்னர் நபிகளது 6ஆவது வயதில் அவரின் தாயாரும் காலமானார். இதைத்தொடர்ந்து , அவரது பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் தான் நாயகம் வளர்ந்தார். சிறிது காலத்தில் இவரும் காலமாக, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

தனது இளமைப் பருவத்தில் செல்வாக்குடனும், நற்குணங்களுடனும் இருந்ததால், நபிகள் நாயகத்தை அனைவரும் அல் அமீன் என்றும், அஸ்ஸாதிக் என்றும் போற்றினர். அப்படியென்றால் நம்பிக்கையாளர் மற்றும் உண்மையாளர் என்று பொருள். தன்னுடைய 23 ஆவது வயதில் கதீஜா அம்மையாரை திருமணம் செய்தார். மேலும் இவருக்கு 11 மனைவி மார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் 7 குழந்தைகள் பிறந்ததில், ஆண்கள் குழந்தையாக இருக்கும் போதே இறந்தும் விட்டனர். பின்னர் இவரின் 40ம் வயதில், இவரை தனது துாதராக அல்லாஹ் அறிவித்தான்.

Milad un nabi:

இவர் இறைவனின் துாதராக அறிவிக்கப்பட்டதும், ”நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடயை துாதனாக இருக்கிறேன்என்று உலக மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டினார். இதனைக் கேட்ட மெக்காவாசிகள் அவரை  53 ஆவது வயது வரை துன்புறுத்தினார்கள். இதனால் தான்  மெக்காவில் இருந்து 450 கி.மீ தூரத்தில் உள்ள மதீனாவுக்கு அவர் குடி பெயர்ந்தார். மதீனாவில் நபிகள் நாயகத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து, போர் புரிய தொடங்கிய மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளச் செய்தார். நாயகம் மிகுந்த பணிவுடையவராக திகழ்ந்தது மட்டுமின்றி, பிறரது துன்பத்தை நீக்குவதிலும் கூட  அக்கறை கொண்டவராக இருந்தார். தனது 63 ஆவது வயது வரை வாழ்ந்த நபிகள் நாயகம், கிபி 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இந்த உலகை விட்டு சென்றார். நபிகள் நாயகம் பிறப்பும், இறப்பும் ஒரே நாள் என்பதும்  குறிப்பிடத்தக்கது. இந்த நாளை தான் மிலாடி நபி என்று அனைவரும் கொண்டாடுகிறோம்.

Milad un nabi:

தனது வாழ்நாளில் ஒழுக்கத்தை கடைப்பிடித்த புனித மனிதர் நபிகள் நாயகம் அவரை நினைவுகூர்ந்து, அவரது வழியில் அனைவரும் நடக்க வேண்டும் என்பதே இந்த பண்டிகையின் நோக்கம்.ஆண்டுதோறும் கொண்டாடப்படும்மிலாது நபி பண்டிகை இந்த மாதம் இஸ்லாமிய  நாட்காட்டியின் மூன்றாவது மாதம்ரபி உல் அவல்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு,மிலாது நபி செப்.28-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

Milad un nabi?

Many Muslims in India observe Milad un-Nabi, which commemorates the Prophet Muhammad’s (or Mohammad’s) birthday. Milad un-Nabi is a gazetted holiday in India and is also known as Nabi Day, Mawlid, Mohammad’s Birthday or the Prophet’s Birthday.

Who celebrated Milad first?

Therefore, it has been concluded that the first Mawlid celebration which was a public festival was started by Sunnis in 1207 by Muaffar al-Dīn Gökburi.

Muslims around the world commemorate Milad-un-Nabi, literally meaning the “birth of the Prophet.” Prophet Muhammad (peace be upon him and his family) was born in Mecca in the year 570 CE and grew up to be a respected merchant, known for his honesty, integrity and trustworthiness.

Leave a Reply