You are currently viewing ரூ.1,000 உரிமைத்தொகை: முதல் மாத தொகை எப்போது கிடைக்கும்..?

ரூ.1,000 உரிமைத்தொகை: முதல் மாத தொகை எப்போது கிடைக்கும்..?

ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இதுவரை 1 கோடியே 75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசிச் செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கிக் கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இத்திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் மாத தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த அனைவருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திருந்தது.

அதன்படி செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் அளிக்கப்பட்டு விட்டது. அதாவது நீங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மெசேஜ் வரும். 1,000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான மெசேஜும் வந்துவிடும்.

முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிந்து வருகின்றன. தேர்வானவர்கள் பெயர்கள் தற்போது லிஸ்டில் கணினி மூலம் பதிவேற்றப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதாவது, நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

Leave a Reply