You are currently viewing SSC MTS தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது

SSC MTS தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது

தொழில்நுட்பம் அல்லாத ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2022-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமிபத்தில் நடத்தி முடித்தது.

தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 5,88,798 பேர் விண்ணப்பம் செய்து தேர்வை எழுதினர். இந்த நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் தொழில்நுட்பம் அல்லாத பணியாளர்கள் (SSC MTS) தாள் 1 தேர்வு 2022 இன் முடிவை அறிவித்துள்ளது.

மொத்தம் 3,015 விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இதில் 1005 பொதுப் பிரிவினர், 250 EWS, 530 SC, 145 ST மற்றும் 715 OBC-யை சேர்ந்தவர்கள் ஆவார்கள். வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஹவால்தார் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.

தேர்வு முடிவுகள் எஸ்எஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://ssc.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் SSC MTS தாள் 1 தேர்வு 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலைச் சரிபார்க்கலாம். கட்ஆஃப் மதிப்பெண்கள், மதிப்பெண் அட்டை தேதி மற்றும் இறுதி விடைக்குறிப்பு தேதி ஆகியவற்றை ஆணையம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply