You are currently viewing Teacher Eligibility Test: ஆசிரியர் தகுதித் தேர்வு: பழங்குடியின மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி

Teacher Eligibility Test: ஆசிரியர் தகுதித் தேர்வு: பழங்குடியின மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி

Teacher Eligibility Test: ஆசிரியர் தகுதித் தேர்வு: பழங்குடியின மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி

கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களைச் சோ்ந்த பழங்குடியின இளைஞா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் கல்வியாண்டில் உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் சோ்க்கையை உறுதி செய்ய பல்வேறு நுழைவுத் தோ்வுகளுக்காக சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தோ்வில் பங்கேற்கவுள்ள பழங்குடியினா் இளைஞா்களுக்கு வரும் 10-ஆம் தேதி இணைய வழியில் பயிற்சிஅளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சியில் சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, வேலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply