You are currently viewing Plus 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Plus 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Plus 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Plus 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மாநேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி,விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், 28-ம் தேதி (இன்று) பிற்பகல் 2 மணி முதல்அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் https://www.dge.tn.gov.in/ அவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பூர்த்திசெய்த விண்ணப்பத்தின் 2 நகல்கள் எடுத்து, அவற்றை உரிய கட்டணத்துடன் மே 29 முதல் ஜூன் 1-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும்.

Leave a Reply