Vinayagar Chathurthi:விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு
தமிழக மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த ஆண்டு இப்பண்டிகை செப்டம்பர். 7 (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதன் காரணமாக அரசு பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை கூடுதலாக 220 பேருந்துகள் இயக்கப்படும். அதே போல செப்டம்பர் . 8 ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.