Fri. Jul 4th, 2025

TNPSC குரூப் – 1 முதன்மை தேர்வு ஊக்கத் தொகையுடன் இலவச பயிற்சி

TNPSC குரூப் – 1 முதன்மை தேர்வு ஊக்கத் தொகையுடன் இலவச பயிற்சி

சென்னை, சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இது தொடர்பாக, மனிதநேய அறக்கட்டளை வெளியிட்ட செய்தி:

‘மனிதநேயம்’ அறக்கட்டளையால் நடத்தப்படும், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான குடிமைப் பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், மத்திய – மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு, கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மனிதநேய கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 49 மாணவ – மாணவியர், டி.என்.பி.எஸ்.சி., குரூப் – 1 முதல் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வை எழுதும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாது, முதல்நிலை தேர்வில்தேர்ச்சி பெற்ற இதர மாணவர்களுக்கும் மனிதநேய கல்வியகத்தில், முதன்மை தேர்வுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும்.நேரடியாக பதிவு செய்ய முடியாத மாணவர்கள், 044 – 2435 83732433 009598404 39393 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது www.mntfreeias.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் பயிற்சி பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *