மூலிகை சோப்பு மற்றும் வற்றல், வடகம் தயாரிப்பு பயிற்சி – சென்னை வேளாண் பல்கலை அறிவிப்பு – Herbal soap and drying, Vadagam preparation training – Chennai Agricultural University Announcement
சென்னை கிண்டியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வருகிற ஏப்ரல் 24 மற்றும் 25 தேதிகளில் பயனுள்ள தயாரிப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
ஏப்ரல் 24 – வற்றல் மற்றும் வடகம் தயாரிப்பு பயிற்சி:
இந்த பயிற்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு, கீழ்க்கண்ட வற்றல் வகைகள் தயாரிக்கும் முறைகள் சொல்லிக் கொடுக்கப்படும்:
- ஜவ்வரிசி வற்றல்
- தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு வற்றல்
- புதினா, கொத்தமல்லி
- வெண்டைக்காய், மணத்தக்காளி
- சுண்டைக்காய், மோர் மிளகாய் வற்றல்கள்
ஏப்ரல் 25 – மூலிகை சோப்பு தயாரிப்பு பயிற்சி:
இந்த பயிற்சியில் கீழ்கண்ட மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் பயன்படுத்தி சோப் தயாரிக்க கற்பிக்கப்படுகிறது:
- பஞ்ச காவ்யா
- ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்ஸிங்
- நலங்கு மாவு, குப்பைமேனி
- சந்தனம், பாதாம் ஆயில், ரோஸ் ஆயில்
- குங்குமப்பூ ஆயில், ரோஸ் எசென்ஸ்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண்:
044 – 2953 0048